×

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வீடியோ வெளியீடு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அதனை செல்போனில் படமெடுத்திருக்கிறார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெறும் விதிமீறல்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சிறையில் விதிமீறல்கள் நடைபெறாது என சிறை நிர்வாகிகள் உறுதியளித்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ரிச்ஜான் என்ற ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு நண்பர்களுடன் ஒரே அறையில் இருந்த ரிச்ஜான் சிறைக்குள்ளேயே கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவையும் தன்னை பாட்சா திரைப்படத்தில் ரஜினி போல சித்தரிக்கும் வீடியோவையும் ரிச்ஜான் சிறைக்குள்ளிருந்தே செல்போனில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் எந்த அளவிற்கு பரப்பன அக்ரஹாராவில் விதிமுறைகள் மீறப்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பிறந்தநாளை செல்போனில் படம்பிடித்து அதனை அனிமேஷன் செய்து வெளியிடும் அளவிற்கு கைதிகளுக்கு சுதந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Tags : Rowdy ,Bangalore ,Agrahara Jail , Bangalore, parappana agrahara prison
× RELATED எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ்...